Colombo (News 1st) தீப்பற்றிய MV X-Press Pearl கப்பலால் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உஸ்வெட்டகெய்யாவ பகுதிக்கு இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
கப்பல் தீப்பற்றியமையினால் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இதன்போது பிரதமர் கண்காணித்தார்.
பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான நிவாரணத்தை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு இதன்போது பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
அத்துடன், கடற்சூழலைப் பாதுகாக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பிரதமரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக பணியாற்றும் அனைவருக்கும் இதன்போது பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
