தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

by Staff Writer 29-05-2021 | 9:34 PM
Colombo (News 1st) தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்குள்ளாபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தொற்று பாதிப்பில் கோவை முதலிடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கோவை மாவட்டத்தில் 4734 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கோவை மாவட்டத்தில் இன்று முதல் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. COVID காரணமாக வருமானத்தை இழந்தவர்களின் நலன் கருதி இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இராமநாதபுரம் மண்டபம் முகாமில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட இலங்கை அதிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட போர் காரணமாக தமிழகம் சென்ற இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மூன்று தலைமுறையாக அங்கு வசித்து வருகின்றனர். தமிழக அரசினால் நிவாரணங்கள் கிடைத்துள்ள போதிலும், முகாமில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் போதிய விழிப்புணர்வு இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.