by Staff Writer 29-05-2021 | 4:13 PM
Colombo (News 1st) திருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்று காணாமற்போன மூன்று மீனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 23 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்களே காணாமற்போயுள்ளனர்.
கடந்த சில நாட்களாக மீனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மீனவர்களைத் தேடி பாரிய படகொன்று ஆழ்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் தங்கவேலாயுதம் கமல் தெரிவித்தார்.
இதேவேளை, காணாமற்போயுள்ள மீனவர்கள் தொடர்பில் இந்திய தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டார்.