வௌ்ளவத்தை, மாளிகாவத்தை உள்ளிட்ட பகுதிகளில் SINOPHARM தடுப்பூசி ஏற்றப்படுகிறது; நாளை யாழ்ப்பாணத்தில்

வௌ்ளவத்தை, மாளிகாவத்தை உள்ளிட்ட பகுதிகளில் SINOPHARM தடுப்பூசி ஏற்றப்படுகிறது; நாளை யாழ்ப்பாணத்தில்

வௌ்ளவத்தை, மாளிகாவத்தை உள்ளிட்ட பகுதிகளில் SINOPHARM தடுப்பூசி ஏற்றப்படுகிறது; நாளை யாழ்ப்பாணத்தில்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2021 | 3:31 pm

Colombo (News 1st) சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட SINOPHARM தடுப்பூசி இன்றும் பல பகுதிகளிலுள்ள மக்களுக்கு ஏற்றப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கும் இந்த தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர் கூறினார்.

கொழும்பு மாவட்டத்தில் வௌ்ளவத்தை, மாளிகாவத்தை மற்றும் மிரிஹான ஆகிய பகுதிகளில் இன்று தடுப்பூசி ஏற்றப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தெற்கு பகுதியிலும் இன்று SINOPHARM தடுப்பூசி ஏற்றப்படுகின்றது.

குருநாகல் – குளியாப்பிட்டிய பகுதியிலும் மாத்தறை – கந்தர பகுதியிலும் காலி, ஹபராதுவ, அஹங்கம, எல்பிட்டிய ஆகிய பகுதிகளிலும் தடுப்பூசி ஏற்றப்படுவதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

நுவரெலியா மற்றும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையங்களிலும் தடுப்பூசி ஏற்றப்படுகிறது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் சுகாதார துறையினர் தடுப்பூசி ஏற்றும் பணியை முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை (30) முன்னெடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்