நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2021 | 9:51 am

Colombo (News 1st) 39 கொரோனா மரணங்கள் நேற்று (28) உறுதி செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றினால் மூவர் நேற்று உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய 36 மரணங்களும் ஏப்ரல் 29 ஆம் திகதி தொடக்கம் கடந்த 27 ஆம் திகதி வரை பதிவானதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

சடலங்களின் PCR அறிக்கையின் பிரகாரம் அவை நேற்றைய தினமே கொரோனா மரணங்களாக உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,363 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, 2845 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 706 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்