கொழும்பு துறைமுக நகர் குறித்து இந்தியா அவதானம்

கொழும்பு துறைமுக நகர் குறித்து இந்தியா அவதானம்

கொழும்பு துறைமுக நகர் குறித்து இந்தியா அவதானம்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2021 | 3:03 pm

Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர் செயற்றிட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

புது டெல்லியிலுள்ள அதிகாரிகளை மேற்கோள் காட்டி “தி ஹிந்து” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர் தொடர்பான சட்ட விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள அரசாங்கம், இது முழுமையாக இலங்கையினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடு என அறிவித்துள்ளது.

அதற்கமைய, அங்கு முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வர்த்தக செயற்றிட்டமாக மாத்திரம் காணப்பட்டால், அது இலங்கையின் தெரிவு என இந்திய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தமது தேசத்தின் அபிலாசைகளுக்கு அமைய, இலங்கையுடன் தொடர்ந்தும் செயற்படுவதாக புது டெல்லியிலுள்ள அதிகாரிகள் தி ஹிந்து பத்திரிகைக்கு கூறியுள்ளனர்.

கொழும்பு துறைமுக நகரமானது, இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என பெயர் குறிப்பிட விரும்பாத புது டெல்லி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்