கொரோனா தொற்றுடன் தப்பியோடிய இளைஞரை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரல்

கொரோனா தொற்றுடன் தப்பியோடிய இளைஞரை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரல்

கொரோனா தொற்றுடன் தப்பியோடிய இளைஞரை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரல்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2021 | 3:52 pm

Colombo (News 1st)  கொரோனா தொற்றுக்குள்ளான இளைஞர் ஒருவர் பொரளையில் தப்பிச்சென்றுள்ளார்.

பொரளை மெகசின் வீதியில் வசிக்கும் 28 வயதான ஒருவரே தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், அவரை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக சுகாதார தரப்பினரும் பொலிஸாரும் இணைந்து அவருடைய வீட்டிற்கு சென்ற போது இளைஞர் தப்பிச் சென்றுள்ளார்.

தப்பிச்சென்றுள்ள இளைஞர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 8 591 587 அல்லது 011 269 40 19 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்