by Staff Writer 28-05-2021 | 4:26 PM
Colombo (News 1st) கடல் உணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு , கம்பஹா போன்ற கடல் பகுதிகளில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றி வந்த கப்பல் தீப்பற்றியதன் காரணமாக உயிரினங்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய இரசாயன பதார்த்தங்கள் கடலில் கலந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
எனினும், இதுவரையில் குறித்த தீ விபத்தினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடலில் கலந்துள்ள பதார்த்தங்கள், அவற்றின் மூலம் உருவாகக்கூடிய தாக்கங்கள் தொடர்பாக நாரா நிறுவனம் ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
நாரா நிறுவனத்தின் ஆய்வறிக்கை கிடைக்கும் வரையில், சம்பந்தப்பட்ட கடல் பிரதேசங்களில் மீன்பிடி செயற்பாடுகளுக்கான தடையை இறுக்கமாக அமுல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.