by Staff Writer 28-05-2021 | 7:39 PM
Colombo (News 1st) மேலும் 2,243 COVID நோயாளர்கள் இன்று (28) அடையாளம் காணப்பட்டனர்.
அதற்கமைய, இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1,77,104 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 2,573 COVID நோயாளர்கள் குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,46,362 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 27,174 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று 27 COVID மரணங்கள் அறிவிக்கப்பட்டதுடன், அவற்றில் நான்கு மரணங்கள் நேற்று பதிவாகின.
நாட்டில் பதிவாகியுள்ள COVID மரணங்களின் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளது.