பொகவந்தலாவையில் நிவாரணப் பொதிகள் திருட்டு: 6 பேர் கைது 

பொகவந்தலாவையில் நிவாரணப் பொதிகள் திருட்டு: 6 பேர் கைது 

பொகவந்தலாவையில் நிவாரணப் பொதிகள் திருட்டு: 6 பேர் கைது 

எழுத்தாளர் Staff Writer

28 May, 2021 | 2:45 pm

Colombo (News 1st) பொகவந்தலாவை – செல்வகந்தை தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்காக விநியோகிப்பதற்கு கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொதிகள் திருடப்பட்ட குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.

செல்வகந்தை தோட்டத்தை சேர்ந்த 6 ஆண்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

நிவாரணப் பொதிகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதிகளே திருடப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களின் வீடுகளில் இருந்த 15 நிவாரணப் பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் நாளை (29) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

நிவாரணப் பொதிகளில் சிலவற்றை தோட்டத் தலைவர்கள் தங்களின் வீடுகளுக்கு கொண்டு சென்றதாக மக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

நேற்றிரவு இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சமூக ஆர்வலர்கள் சிலர் அதனை கைடயக்க தொலைபேசிகளில் ஔிப்பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தோட்டத் தலைவர்களின் செயற்பாடு குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக செல்வகந்தை தோட்ட மக்கள் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்