காங்கோவில் வெடித்துச் சிதறும் எரிமலை: 32 பேர் பலி, பலரைக் காணவில்லை

காங்கோவில் வெடித்துச் சிதறும் எரிமலை: 32 பேர் பலி, பலரைக் காணவில்லை

காங்கோவில் வெடித்துச் சிதறும் எரிமலை: 32 பேர் பலி, பலரைக் காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

28 May, 2021 | 3:25 pm

Colombo (News 1st) ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்ள உலகின் அபாயகரமான எரிமலைகளில் ஒன்றான Nyiragongo சில தினங்களுக்கு முன்பாக வெடித்துச் சிதற ஆரம்பித்தது.

எரிமலையிலிருந்து வௌியேறும் லாவா குழம்புகள் அருகில் உள்ள Goma நகருக்குள் புகுந்துள்ளது.

இதன் காரணமாக உருவான நச்சுப் புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 32 பேர் பலியாகியுள்ளனர். 172 குழந்தைகள் உட்பட பலரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனவர்களில் பலர் எரிமலைக் குழம்பில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

எரிமலை பாதிப்பால் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் அண்டைய நாடான ருவாண்டாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், எரிமலை பகுதியில் நேற்று (27) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, எந்த நேரத்திலும் எரிமலை பெரிய அளவில் வெடித்துச் சிதறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதனால் Goma நகரில் உள்ள அனைவரையும் அங்கிருந்து வௌியேற்றுமாறு காங்கோ அரவு உத்தரவிட்டுள்ளது.

அங்கு 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை அங்கிருந்து வௌியேற்றும் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

 

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்