ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவுகளுக்காக தபால் அலுவலகங்களில் காத்திருந்த மக்கள்

ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவுகளுக்காக தபால் அலுவலகங்களில் காத்திருந்த மக்கள்

எழுத்தாளர் Staff Writer

28 May, 2021 | 5:44 pm

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் இன்று (28) திறக்கப்பட்டதுடன், நாளையும் (29) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவு , பொதுஜன மாதாந்த கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதற்காக பலரும் இன்று தபால் அலுவலகங்களுக்கு சென்றிருந்தனர்.

நாளை காலை 9.30 முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை, டயகம, ஓல்ட்ப்ரூக், லிந்துலை தபால் நிலையங்களுக்கு முதியோர் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என தெரிவித்து முதியவர்கள் திரும்பி அனுப்பப்பட்டனர்.

கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை முதல் தபால் நிலையங்களின் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்