by Bella Dalima 27-05-2021 | 3:23 PM
Colombo (News 1st) இந்தியாவின் கிழக்கு பகுதியை தாக்கிய யாஸ் சூறாவளியினால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.
சூறாவளி காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருப்பிடங்களிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.
யாஸ் சூறாவளியினால் ஜார்க்கண்ட் மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மேற்கு வங்கமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கப்பகுதியில் மணித்தியாலத்திற்கு சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.
பலத்த காற்றுடன் கூடிய மழையினால் மேற்கு வங்கத்தின் சுமார் 1100 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
யாஸ் சூறாவளி எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக வலுவிழக்குமென இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கத்தால் எதிவரும் சில மணித்தியாலங்களுக்கு மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையால் கொல்கத்தா உள்ளிட்ட 4 விமான நிலையங்கள் பகுதியளவில் மூடப்பட்டுள்ளன.