மேலும் 29 கொரோனா மரணங்கள் உறுதி

மேலும் 29 கொரோனா மரணங்கள் உறுதி; கொழும்பில் அதிகளவானோருக்கு தொற்று

by Staff Writer 27-05-2021 | 2:04 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 29 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,298 ஆக அதிகரித்துள்ளது. மட்டக்குளி, கொழும்பு - 15, கொழும்பு - 14, வாழைச்சேனை, நாவலப்பிட்டி, ஹப்புகஸ்தலாவ, இரத்தொட்டை, குருநாகல், ஹாலிஎல உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஹாலிஎல பகுதியை சேர்ந்த 20 வயதான யுவதி தொற்றினால் உயிரிழந்துள்ளார். தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஏனையோர், 46 முதல் 94 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே, நேற்று 2,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 50 பேர் வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதனை தவிர கொழும்பு மாவட்டத்திலேயே நேற்று பெருமளவான கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கொழும்பு - 573 பேர் கம்பஹா - 530 பேர் களுத்துறை - 120 பேர் கண்டி - 257 பேர் திருகோணமலை - 151 பேர் இரத்தினபுரி - 129 பேர் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் கொரோனா இரண்டாம் அலையில் மாத்திரம் 75 ,193 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, 1,72,277 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 1,42,378 பேர் குணமடைந்துள்ளனர். 28,601 கொரோனா நோயாளர்கள் தொடந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்