சில துறைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

சில துறைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்: அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 27-05-2021 | 5:43 PM
Colombo (News 1st) எவ்வித இடையூறுகளுமின்றி மக்களின் நாளாந்த வாழ்க்கையை முன்னெடுக்கும் நோக்கில் சில துறைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, துறைமுக அபிவிருத்தி அதிகார சபை பெட்ரோலிய உற்பத்தி உள்ளிட்ட அனைத்து விதமான எரிபொருள் விநியோகம் மற்றும் பகிர்ந்தளித்தல் துறைமுகங்கள் மற்றும் கடற்றொழில் சேவை ரயில்வே இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உதவியாளர் சேவை உள்ளடங்கலாக பிரதேச மட்டத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச ஊழியர்களினது சேவைகளும் குறித்த வர்த்தமானியினூடாக அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகள், காப்புறுதி சேவைகள், உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ சேவை ஆகியனவும் ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.