சேதனப் பசளை விநியோகத்திற்கான திட்டமொன்றை வகுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

சேதனப் பசளை விநியோகத்திற்கான திட்டமொன்றை வகுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

எழுத்தாளர் Staff Writer

27 May, 2021 | 2:13 pm

Colombo (News 1st) பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்கான திட்டமொன்றை வகுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி தௌிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சேதனப் பசளை தயாரிப்பாளர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்