சபாநாயகர் கைச்சாத்து: கொழும்பு துறைமுக நகர் சட்டமூலம் இன்றிலிருந்து அமுலுக்கு வந்தது

சபாநாயகர் கைச்சாத்து: கொழும்பு துறைமுக நகர் சட்டமூலம் இன்றிலிருந்து அமுலுக்கு வந்தது

சபாநாயகர் கைச்சாத்து: கொழும்பு துறைமுக நகர் சட்டமூலம் இன்றிலிருந்து அமுலுக்கு வந்தது

எழுத்தாளர் Staff Writer

27 May, 2021 | 2:54 pm

Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கைச்சாத்திட்டுள்ளார்.

சபாநாயகர் இன்று (27) முற்பகல் சட்டமூலத்தில் கையெழுத்திட்டதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டம் இன்று முதல் செல்லுபடியாகும் என சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் திருத்தங்களுடன் கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பின் போது 91 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

மூன்றாம் வாசிப்பின் போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் வழங்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்