by Staff Writer 26-05-2021 | 7:19 PM
Colombo (News 1st) வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு உலகவாழ் மக்களுக்காக ''கம்மெத்த தம்சவிய'' ஒன்லைன் வெசாக் வலயம் முதற்தடவையாக இம்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்றும் (26) நாளையும் (27) WWW.GAMMEDDA.LK என்ற இணையத்தளத்தின் ஊடாக இந்த வெசாக் வலயத்தை பார்வையிடும் வாய்ப்பு மக்களுக்கு கிட்டியுள்ளது.
இன்று காலை முதல் அதிகளவிலானவர்கள் தம்சவிய ஒன்லைன் வெசாக் பந்தலை பார்வையிட்டு வருகின்றனர்.
கம்மெத்த தம்சவிய ஒன்லைன் வெசாக் பந்தல், உண்மையான தலைவரிடமிருக்க வேண்டிய தலைமைத்துவ பண்புகளை எடுத்தியம்பும் ''அபன்னக்க'' ஜாதக கதையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரபல சித்திரக் கலைஞர் ஹேமந்த வறக்காபிட்டிய இந்த வெசாக் பந்தலுக்கான சித்திரங்களை வரைந்துள்ளார்.