ஜூன் முதலாம் திகதி முதல் பயணிகள் விமான சேவை மீள ஆரம்பம்

ஜூன் முதலாம் திகதி முதல் பயணிகள் விமான சேவை மீள ஆரம்பம்

ஜூன் முதலாம் திகதி முதல் பயணிகள் விமான சேவை மீள ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2021 | 2:30 pm

Colombo (News 1st) எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் பயணிகள் விமான சேவை மீள ஆரம்பமாகவுள்ளது.

எனினும், ஒரு விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 14 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் பயணிகளுக்கு தொடர்ந்தும் பயணத்தடை அமுல்படுத்தப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கடவுச் சீட்டினை கொண்டுள்ளவர்களும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களும் தாயகம் திரும்புவதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கைக்கு வருகை தரும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டும் என அதிகார சபை கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்