கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அருகில் பாரிய குழி

கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அருகில் பாரிய குழி

கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அருகில் பாரிய குழி

எழுத்தாளர் Staff Writer

26 May, 2021 | 11:26 am

Colombo (News 1st) கொத்மலை – காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு பிரவேசிக்கும் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.

இன்று காலை கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அணைக்கட்டுக்கு பிரவேசிக்கும் பகுதியில் நிலம் தாழிறங்கியுள்ளதுடன், அணைக்கட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என மஹாவலி அதிகார சபையின் அணைக்கட்டுக்கு பொறுப்பான பணிப்பாளர் M.A.S.அருப்பல தெரிவித்தார்.

வீதி தாழிறங்கியுள்ளமை தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்