கிளிநொச்சி, மன்னாரில் 2 சடலங்கள் மீட்பு

by Staff Writer 25-05-2021 | 5:02 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - கோவிந்தன் கடை சந்தியில் நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் இன்று (25) மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி - திருவையாறு, வில்சன் வீதியை சேர்ந்த 30 வயதான நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, மன்னார் - தாழ்வுபாடு கடற்கரை பகுதிக்கு அருகில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழ்வுபாடு கடற்கரை பகுதிக்கு சற்றுத் தொலைவில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரையொதுங்கியுள்ளது. பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்