இலங்கைக்கான சுற்றுலாவிற்கு அமெரிக்கா தடை

இலங்கைக்கான சுற்றுலாவிற்கு அமெரிக்கா தடை

by Bella Dalima 25-05-2021 | 3:08 PM
Colombo (News 1st) அமெரிக்கா இலங்கைக்கான சுற்றுலாவிற்கு தடை விதித்துள்ளது. இலங்கையில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு அமெரிக்கா நேற்று (24) பயண ஆலோசனைக் கோவையை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, அமெரிக்கா இலங்கைக்கு நான்காம் நிலை சுகாதார அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் கொரோனா தொற்று நிலைமை தொடர்பிலான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறு அமெரிக்கா அந்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.