மலேசியாவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 200 பேர் காயம்

மலேசியாவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 200 பேர் காயம்

மலேசியாவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 200 பேர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

25 May, 2021 | 3:57 pm

Colombo (News 1st) மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நிலக்கீழ் சுரங்கமொன்றில் இலகுரக மெட்ரோ ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 200-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

அந்நாட்டு நேரப்படி நேற்று (24) இரவு 8.45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திருத்தப் பணிகளைத் தொடர்ந்து பயணிகள் எவருமின்றிச் சென்ற ரயில், அதே தடத்தில் எதிர்த் திசையில் வந்த ரயிலுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. குறித்த ரயிலில் 213 பயணிகள் இருந்துள்ளனர்.

அவர்களில் 47 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன், 166 பேருக்கு சிறியளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்