பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட வேண்டும் என அறிவிப்பு

பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட வேண்டும் என அறிவிப்பு

பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட வேண்டும் என அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

25 May, 2021 | 2:40 pm

Colombo (News 1st) பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை மூடப்பட வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பல்பொருள் அங்காடிகளிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பொருந்தும் என அவர் கூறியுள்ளார்.

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் மதுபான விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து அறிவிப்பதற்கு கலால் வரித் திணைக்களத்தினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த தொலைபேசி இலக்கங்கள்

071 – 702 61 58
071 – 634 52 91
071 – 310 850 7
075 – 23 27 483
071 – 81 22 333

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்