நாளை (25) காலை முதல் தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

நாளை (25) காலை முதல் தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

நாளை (25) காலை முதல் தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

எழுத்தாளர் Staff Writer

24 May, 2021 | 6:37 pm

Colombo (News 1st) நான்கு மாவட்டங்களில் உள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை (25) அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தின் டயகம பொலிஸ் பிரிவிலுள்ள சந்திரிகாமம் தோட்டம், சந்திரிகாமம் NLDB பண்ணை ஆகிய பகுதிகள் நாளை அதிகாலை 04 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவும் தெல்கமுவ நகரின் ஒரு பகுதியும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் கிரிபத்கொட பொலிஸ் பிரிவிலுள்ள இரியவிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவும் நாளை காலை 04 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை – உரவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் நாளை காலை 04 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்