அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் முறையிட அவசர அழைப்பு இலக்கம் அறிமுகம்

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் முறையிட அவசர அழைப்பு இலக்கம் அறிமுகம்

எழுத்தாளர் Bella Dalima

24 May, 2021 | 7:11 pm

 Colombo (News 1st) அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் மக்களுக்குள்ள பிரச்சினைகள் குறித்து முறையிடுவதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் இயங்கும் 1965 என்ற அவசர அழைப்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அவசரஅழைப்புப் பிரிவு அலரி மாளிகையில் இயங்கவுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தமது அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தால், அரச கட்டமைப்புடன் தொடர்புகொள்வதில் சிக்கல் இருந்தால், 1965 என்ற இலக்கத்தின் ஊடாக அலரி மாளிகையில் ஜனாதிபதி, பிரதமர், பசில் ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய இயங்கும் மத்திய நிலையத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும் என இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்