Colombo (News 1st) நேற்றைய தினம் (22) 46 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், நாட்டில் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,178 ஆக உயர்வடைந்துள்ளது.
மீட்டியாகொடை, அக்மீமன (இருவர்), பதுளை, ரத்கம (இருவர்), ஹவ்பே, காலி (இருவர்), பத்தேகம (இருவர்), ஹல்விட்டிகல, உனவட்டுவன, இமதூவ, அஹங்கம, கரந்தெனிய, தொடங்தூவ, பட்டபொல, கந்தப்பொல (இருவர்), நுவரெலியா (மூவர்), வத்தளை, பல்லேவெல, மினுவாங்கொடை, கொழும்பு - 15 (இருவர்), அங்குரன்கொட, குருநாகல், வஸ்கடுவ, களுத்துறை, யக்கல, மாலபே, தெகட்டன, பயாகல, பொரலஸ்கமுவ, உடஹமுல்ல, பேராதனை (இருவர்), மெனிக்ஹின்ன, கட்டுகஸ்தோட்டை, பிலிமத்தலாவை, கந்தானை, மட்டக்குளி மற்றும் குண்டசாலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 46 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
