பலத்த மழை மற்றும் காற்று தொடர்பில் எச்சரிக்கை

வானிலை முன்னறிவிப்பு: பலத்த மழை மற்றும் காற்று தொடர்பில் எச்சரிக்கை

by Staff Writer 23-05-2021 | 4:20 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை நிலவி வருகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வட மத்திய, வட மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டது. இதனிடையே, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடற்றொழில் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களை அறிவுறுத்தியுள்ளது.

ஏனைய செய்திகள்