ஆர்ஜென்டீனாவில் கொரோனா முடக்கல் ஆரம்பம்

ஆர்ஜென்டீனாவில் கொரோனா முடக்கல் ஆரம்பம்

ஆர்ஜென்டீனாவில் கொரோனா முடக்கல் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

23 May, 2021 | 4:16 pm

Colombo (News 1st) 9 தினங்கள் கொரோனா முடக்கலொன்றை ஆர்ஜென்டீனா ஆரம்பித்துள்ளது.

கொரோனா தொற்று மீள அதிகரித்துச் செல்லும் நிலையிலும், தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு மந்தநிலைக்குச் சென்றுள்ள நிலையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் மோசமான நிலையை நாடு அனுபவிப்பதாக ஆர்ஜென்டீன ஜனாதிபதி ஆல்பேர்டோ பெர்ணான்டஸ் (Alberto Fernandez) தெரிவித்தார்.

கடந்த வாரத்தின் ஒருநாளில் 35,000 இற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளில் பதிவாகிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மில்லியனைக் கடந்தது.

இது உலகம் முழுவதிலும் பதிவாகிய கொரோனா மரணங்களின் 30 வீதமெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவற்றில் 90 வீதமான மரணங்கள் Brazil, Mexico, Colombia, Argentina மற்றம் Peru ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்