சீனாவில் இருவேறு நிலநடுக்கங்களில் மூவர் உயிரிழப்பு

சீனாவில் இருவேறு நிலநடுக்கங்களில் மூவர் உயிரிழப்பு

by Staff Writer 22-05-2021 | 9:12 PM
Colombo (News 1st) சீனாவின் தென்மேற்கு பிராந்தியத்தில் மியன்மார் எல்லைக்கு அருகில் பதிவான இருவேறு நிலநடுக்கங்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 6.4 மெக்னிட்யூட் அளவில் பதிவான நிலநடுக்கத்தினால், சீனாவின் மத்திய பகுதியில் பாலமொன்று உடைந்து வீழ்ந்ததுடன் மேலும் பல சேதங்களும் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இரண்டாவதாக பதிவாகிய நிலநடுக்கம் 7.3 மெக்னிட்யூட் அளவில் பதிவாகியது. இந்த நிலநடுக்கங்களின் பின்னர் 453 தடவைகள் சிறிய அதிர்வுகள் பதிவாகியதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்த இரு நிலநடுக்கங்களுக்கிடையில் தொடர்புகள் இல்லையென அமெரிக்க புவிச்சரிதவியல் பணியகம் தெரிவித்துள்ளது.