சட்டமா அதிபர் திணைக்கள பெயர்ப்பலகையில் தமிழ் புறக்கணிப்பு: கவனம் செலுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவிப்பு 

சட்டமா அதிபர் திணைக்கள பெயர்ப்பலகையில் தமிழ் புறக்கணிப்பு: கவனம் செலுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

22 May, 2021 | 5:56 pm

Colombo (News 1st) சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய இலத்திரனியல் நூலகத்தின் பெயர்ப்பலகையில் தமிழ் மொழி உள்வாங்கப்படாமை தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய இலத்திரனியல் நூலகம் நேற்று (21) திறந்து வைக்கப்பட்டது.

சீன அரசாங்கம் மற்றும் மக்களின் அனுசரணையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பெயர்ப்பலகையில் விபரங்கள் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் குறிப்பிடப்பட்டிருந்தன.

எனினும், அதில் தமிழ் மொழியில் விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.

இது தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

இந்த விடயம் தொடர்பில் தான் சீனாவின் உரிய அதிகாரிகளுக்கு தௌிவுபடுத்திய பின்னர் தற்போது அந்த பெயர்ப்பலகை நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழ் மொழியையும் உள்வாங்கி புதிய பெயர் பலகையை பொருத்துவதாக அவர்கள் கூறியுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்