குருநாகலில் அதிநவீன தேசிய வைத்தியசாலையை நிர்மாணிப்பது தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

குருநாகலில் அதிநவீன தேசிய வைத்தியசாலையை நிர்மாணிப்பது தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

22 May, 2021 | 9:21 pm

Colombo (News 1st) குருநாகலில் உள்ள மாகாண வைத்தியசாலையை அதிநவீன தேசிய வைத்தியசாலையாக நிர்மாணிக்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று நடைபெற்றது.

காணியைப் பெற்றுக்கொள்ளல், நிரப்புதல் மற்றும் புதிய வைத்தியசாலையை நிர்மாணித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளின் பிரதிபலன்கள் தொடர்பாக அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தகவல்களை கேட்டறிந்துகொண்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொத்த சனத்தொகையில் 10 வீதமான மக்களுக்கு இந்த வைத்தியசாலை மூலம் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் குருநாகல், புத்தளம் உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் நேரடியாக இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் ஆலோசனைகளின் பிரகாரம் பல்வேறு வசதிகளுடன் புதிய வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்