இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

இன்று (21) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

by Staff Writer 21-05-2021 | 2:40 PM
Colombo (News 1st) மூன்று மாவட்டங்களில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (21) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 09 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - பலாலி பொலிஸ் பிரிவில் பலாலி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பொலிஸ் பிரிவில் கல்மடு கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மொனராகலை மாவட்டத்தின் செவனகல பொலிஸ் பிரிவிலுள்ளகிரிவெவ, செவனகல, பஹிராவ, ஹபரன்தலாவ, ஹபரகல, மஹகம, இதிகொல பெலஸ்ஸ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை 06 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, 09 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பல பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, கேகாலை, களுத்துறை, புத்தளம், அம்பாறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில், தேவிபுரம், புதுக்குடியிருப்பு மேற்கு, புதுக்குடியிருப்பு கிழக்கு, மந்துவில், மல்லிகைத்தீவு வடக்கு, கோம்பாவில், உடையார்கட்டு வடக்கு, உடையார்கட்டு தெற்கு மற்றும் வல்லிபுனம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முள்ளியவளை பொலிஸ் பிரிவில் முள்ளியவளை மேற்கு மற்றும் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொடிகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள கொடிகாமம் மத்தி மற்றும் கொடிகாமம் வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அம்பாறை - தெஹியத்தகண்டி பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புதிய மெதகம கிராம உத்தியோகத்தர் பிரிவும் விடுவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் மஹபாகே பொலிஸ் பிரிவிலுள்ள மகுல்பொக்குன கிராமமும், வத்தளை பொலிஸ் பிரிவிலுள்ள பள்ளியவத்த தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் மீகஹதென்ன பொலிஸ் பிரிவில் வலல்லாவிட்ட தெற்கு, மாகலந்தாவ கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கேகாலை புலத்கொஹூபிட்டி பொலிஸ் பிரிவில் உடபொத்த மற்றும் கெந்தேவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் மெத கிரிமெட்டியாவ கிராம உத்தியோகத்தர் பிரிவும் இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பொலிஸ் பிரிவில் படுவன்ஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை மற்றும் மஹரகம ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.