யாழ். மாவடியில் கட்டளையை மீறி பயணித்த மணல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

யாழ். மாவடியில் கட்டளையை மீறி பயணித்த மணல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

எழுத்தாளர் Staff Writer

21 May, 2021 | 2:56 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மணற்காடு – மாவடி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த மணல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இன்று பகல் 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற லொறியின் டயரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, லொறியை செலுத்திய துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்