நோர்வுட் பிரதேச சபையில் 10 பேருக்கு கொரோனா தொற்று

நோர்வுட் பிரதேச சபையில் 10 பேருக்கு கொரோனா தொற்று

நோர்வுட் பிரதேச சபையில் 10 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

21 May, 2021 | 3:44 pm

Colombo (News 1st) ஹட்டன் – நோர்வுட் பிரதேச சபையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோர்வுட் பிரதேச சபையின் செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதாரத் தரப்பினர் குறிப்பிட்டனர்.

பிரதேச சபையின் இரண்டு உறுப்பினர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றும் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோர்வுட் பிரதேச சபையின் தலைவருக்கு நேற்று (20) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்