Colombo (News 1st) மட்டக்களப்பு மாவட்டத்தின் 05 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன ஊரணி, பாலமீன்மடு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி வேலூர், திருச்செந்தூர், நொச்சிமுனை (171A) கிராம சேவகர் பிரிவின் பூநொச்சிமுனை கிராமம் தவிர்ந்த மற்றைய கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
