இன்று 2,780 பேருக்கு கொரோனா தொற்று

இன்று 2,780 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 20-05-2021 | 7:53 PM
Colombo (News 1st) இன்று (20) இதுவரை 2,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில் இதுவரை 1,54,123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1051 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து 1,23,532 பேர் குணமடைந்துள்ளனர். தொற்றுக்குள்ளான 30,707 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.