by Staff Writer 20-05-2021 | 3:44 PM
Colombo (News 1st) தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, அதிவேக வீதிகளில் பயணிக்கும் அம்பியூலன்ஸ்களுக்கு கட்டணம் அறிவிடாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எந்தவொரு பகுதியிலிருந்து பயணிக்கும் அம்பியூலன்ஸ்களும் கட்டணம் செலுத்தாது அதிவேக வீதிகளில் பயணிக்க முடியும் என பெருந்தெருக்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று முதல் மறு அறிவித்தல் வரை இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.