தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை 19 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு கோரிக்கை

தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை 19 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு கோரிக்கை

தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை 19 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

20 May, 2021 | 4:36 pm

Colombo (News 1st) தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளக்கூடிய திருத்தங்களை எதிர்வரும் 19 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்து மூலம் அறிவிக்குமாறு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

விசேட தெரிவுக்குழு கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்தது.

சபை முதல்வரும் வௌிவிவகார அமைச்சருமான தினேஸ் குணவர்தனவின் தலைமையில், தேர்தல் வாக்களிப்பு முறை மற்றும் சட்ட மறுசீரமைப்பிற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு செயற்படுகிறது.

தேர்தல் சட்டங்கள் தொடர்பில் திருத்தங்களை முன்வைக்க விரும்பும் தனிநபர்களும் அமைப்புகளும் தங்களின் ஆலோசனைகளை எழுத்து மூலமாகவோ அல்லது மின்னஞ்சலூடாகவோ பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்க முடியும்.

செயலாளர்,
பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு,
இலங்கை பாராளுமன்றம்,
ஶ்ரீ ஜயவர்தனபுர ,
கோட்டே

என்ற முகவரிக்கு எழுத்து மூல ஆலோசனைகளை அனுப்ப முடியும் என பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்