இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கான புதிய தலைவர் தெரிவு 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கான புதிய தலைவர் தெரிவு 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கான புதிய தலைவர் தெரிவு 

எழுத்தாளர் Staff Writer

20 May, 2021 | 11:40 am

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.

2021 – 2023 ஆண்டுக்கான அதிகாரிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (20) Zoom தொழில்நுட்பத்தினூடாக நடைபெற்றது.

அதில் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மீண்டும் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளதாப இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டது.

இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கே. மதிவாணன் தரப்பினர் நேற்று முன்தினம் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்