COVID: உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது, இன்று 3,051 பேருக்கு தொற்று

by Staff Writer 19-05-2021 | 7:46 PM
Colombo (News 1st) இலங்கையில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான COVID தொற்றாளர்கள் இன்று (19) பதிவாகியுள்ளனர். இன்று இதுவரை 3,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் இதுவரை COVID தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,50,000-ஐ கடந்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றிரவு 34 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1015 ஆக அதிகரித்துள்ளது.