வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென அறிவிப்பு

by Bella Dalima 19-05-2021 | 2:54 PM
Colombo (News 1st) எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்பிராந்தியத்தை அண்மித்த பகுதியில் எதிர்வரும் 23 ஆம் திகதி தாழமுக்க நிலை மேலும் வலுவடைவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. மன்னார் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவுமெனவும் காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் வரையிலான கடற்பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் காங்கேசன்துறை ஊடான கடற்பிராந்தியத்திலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.