ரியாஜ் பதியுதீனை விடுவிக்கக் கோரி மனு தாக்கல்

ரியாஜ் பதியுதீன் கைது சட்டவிரோதமானது: 500 கோடி ரூபா நட்டஈடு கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல்

by Staff Writer 19-05-2021 | 6:31 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை விடுவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரியாஜ் பதியுதீனின் கைது சட்டவிரோதமானது எனவும் அதற்கு 500 கோடி ரூபா நட்டஈடு கோரியும் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசா ஊடாக உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் திகதி அவர் விடுதலை செய்யப்பட்டார். அதே குற்றச்சாட்டின் கீழ் ரியாஜ் பதியுதீன் கடந்த மாதம் 24 ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.