தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 340 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 340 பேர் கைது

by Staff Writer 19-05-2021 | 10:11 AM
Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய அடையாள அட்டை முறைமையை மீறி, வீடுகளிலிருந்து வௌியே வந்த 99 பேரும் இந்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 10,413 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.