கொரோனா தொற்றிலிருந்து எமது மக்களின் உயிரை காப்பாற்ற மக்கள் சக்தியின் பங்களிப்பு

கொரோனா தொற்றிலிருந்து எமது மக்களின் உயிரை காப்பாற்ற மக்கள் சக்தியின் பங்களிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 May, 2021 | 1:20 pm

Colombo (News 1st) முழு நாட்டையும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ள கொரோனா தொற்றிலிருந்து நமது மக்களின் உயிரைப் பாதுகாக்கும் தேசிய பொறுப்புக்கு தோள்கொடுக்க மக்கள் சக்தி பங்களிப்பு நல்கியுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சூழலை எதிர்கொள்வதற்காக இயலுமான அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறு கொவிட் நிர்வாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.

அந்தக் கோரிக்கைக்கு மக்கள் சக்தி உடனடியாக பதிலளித்து, இன்று (19) முற்பகல் கம்பஹா வைத்தியசாலைக்கு நவீன உபகரணங்களுடனான சுவீடனில் தயாரிக்கப்பட்ட வென்டிலேட்டர் (Ventilator) கட்டமைப்பை அன்பளிப்பு செய்தது.

இந்த அன்பளிப்பை கம்பஹா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் மஹிந்த இலேபெரும ஏற்றுக்கொண்டார்.

கொவிட் நிர்வாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இந்த சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டிருந்தார்.

முழுநாடே எதிர்கொண்டுள்ள தொற்றிலிருந்து மீட்கும் தேசிய பொறுப்பை நிறைவேற்ற மக்கள் சக்தி தயாராக உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்