மியன்மாருக்காக கோரிக்கை விடுத்த அழகி

மியன்மாருக்காக பிரார்த்தியுங்கள்: பிரபஞ்ச அழகிப் போட்டியில் கோரிக்கை விடுத்த அழகி

by Bella Dalima 18-05-2021 | 3:28 PM
Colombo (News 1st) 69 ஆவது பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் ஹாலிவுட் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) இரவு நடந்தது. மெக்சிக்கோ அழகி ஆண்ட்ரியா மேஸா (Andrea Meza)  பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார். இதில் மியன்மார் நாட்டின் சார்பில் Thuzar Wint Lwin என்கிற அழகி பங்கேற்றார். இவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாத போதும் சிறந்த தேசிய ஆடைக்கான விருதை வென்றார். அவர் மியன்மாரின் பாரம்பரிய உடையில் மேடையில் அழகு நடை போட்டு வந்த போது ‘‘மியன்மாருக்காக பிரார்த்தியுங்கள் (Pray For Myanmar)’’ என்கிற பதாகையை கையில் ஏந்தி வந்தார். அதன் பின்னர் அவர் பேசியபோது
எங்கள் மக்கள் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்கிறார்கள். இராணுவத்தால் சுடப்படுகிறார்கள். மியன்மாரை பற்றி பேச அனைவரையும் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.‌ பிரபஞ்ச அழகியின் மியன்மார் போட்டியாளர் என்கிற முறையில் ஆட்சி கவிழ்ப்பு முதல் என்னால் முடிந்த வரை நான் பேசிக்கொண்டு இருக்கிறேன். எல்லோரும் மியன்மாருக்காக பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன்
என கூறினார்.‌ மியன்மாரில் கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதும், இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் மக்களை இராணுவம் துப்பாக்கி சூடு நடத்திக் கொல்வதும் குறிப்பிடத்தக்கது.   https://twitter.com/MissUniverse/status/1393003903495643138?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1393003903495643138%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.cnn.com%2Fstyle%2Farticle%2Fmiss-universe-myanmar-singapore-protest-uruguay%2Findex.html