சீதுவயில் COVID இடைநிலை சிகிச்சை நிலையம்; ஜனாதிபதி கண்காணிப்பு

by Staff Writer 18-05-2021 | 9:20 PM
Colombo (News 1st) சீதுவயில் அமைக்கப்பட்டுள்ள COVID இடைநிலை சிகிச்சை நிலையத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று கண்காணித்தார். மூன்று நோயாளர் விடுதிகளைக் கொண்ட இந்த சிகிச்சை நிலையத்தில் ஒரே தடவையில் 1200 நோயாளர்கள் சிகிச்சை பெற முடியும். 10 நாட்களில் இராணுவத்தினரால் இந்த சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் சிகிச்சை பெற முடியாத, பாரதூரமான நோய் அறிகுறிகள் தென்படாத COVID நோயாளர்கள் இந்த சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்படவுள்ளனர்.