முல்லைத்தீவில் 255 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 18-05-2021 | 9:23 AM
Colombo (News 1st) இன்று (18) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2456 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. இவர்களில் 23 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர். கொழும்பு மாவட்டத்தில் 320 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 677 பேரும் பதுளை மாவட்டத்தில் 50 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 23 நபர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 255 பேரும் மன்னார் மாவட்டத்தில் ஐவரும் நுவரெலியா மாவட்டத்தில் 25 பேரும் கண்டி மாவட்டத்தில் 34 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 51 நபர்களும் யாழ். மாவட்டத்தில் இருவரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 17 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 பேரும் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் 254 பேருக்கும் புல்மோட்டை பகுதியில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா - ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் ஒருவருக்கும் ஹட்டன் பகுதியில் ஒருவருக்கும் கந்தப்பொல பகுதியில் ஒருவருக்கும் வலப்பனை பிரதேசத்தில் 22 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் (17) 19 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டது. பொரலஸ்கமுவ, மெதகீபிய, வஸ்கடுவ, மக்கொன, களுத்துறை, பயாகல, மொறட்டுவை, அம்பேபுஸ்ஸ, காலி (இருவர்), இறம்புக்கனை, பொல்கொல்ல, கட்டுவன, பாதுக்க, தம்புள்ளை, தெனிய, ஹப்புகஸ்தலாவ, உடபிட்டிவல மற்றும் கடுவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19 பேரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். அதன் பிரகாரம், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 981 ஆக அதிகரித்துள்ளது.   நாட்டில் இதுவரை மொத்தமாக 145,202 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.