வத்தளை உள்ளிட்ட பகுதிகளில் 16 மணி நேர நீர் வெட்டு

வத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் 16 மணி நேர நீர் வெட்டு

by Staff Writer 18-05-2021 | 12:17 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (19) காலை முதல் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய பேலியகொடை, வத்தளை, மாபோல, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ, களனி, பியகம, மஹர, தொம்பே, கம்பஹா ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 8.30 மணி தொடக்கம் 16 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.