மேலும் 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்

மேலும் 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்

மேலும் 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

18 May, 2021 | 8:04 am

Colombo (News 1st) கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இரு மாவட்டங்களின் 3 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதனடிப்படையில்,

கம்பஹா மாவட்டத்தின் துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டிபன வடக்கு மற்றும் கெபுன்கொட கிராம சேவகர் பிரிவின் செபஸ்தியன் மாவத்தை தொடக்கம் தெபடிஸ் மாவத்தை வரையான பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அங்குணகொலபெலஸ்ஸ பொலிஸ் பிரிவின் Rote கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கப்பட்டது.

இதேவேளை, 04 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 08 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்தின் அம்பலான்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடஹேன, தல்கஸ்கொட மற்றும் ரத்கம பொலிஸ் பிரிவின் இம்புல்கொட, கட்டுதம்பே ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ பொலிஸ் பிரிவின் சூரியவெவ நகரில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பக்மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் ரன்ஹெல கிராமம், சேருபிட்டிய கிராம சேவகர் பிரிவின் சேருபிட்டிய உப பகுதி ஆகியன விடுவிக்கப்பட்டுள்ளன.

பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொட பொலிஸ் பிரிவின் சிரிகெத்த கிராம சேவகர் பிரிவில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்